பக்கம்:இன்னொரு உரிமை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னொரு உரிமை 185

எவர்சில்வர், துண்டை உதறிப் போட்டுக்கொண்டார். மோகன் மனைவியின் மன நிலையை அவள் முகத்தில் பார்க்க முயற்சி செய்தான். தமயந்தியோ அண்ணனுக்கு மனம் நோகுமே என்ற வருத்தத்தை, அண்ணி மாட்டிக்கொண்ட மகிழ்ச்சியால் ஈடுகட்டிக் கொண்டிருந்தாள்.

சின்னச்சாமி லட்சுமியை இழுத்துக்கொண்டு ‘மாட்டுத் தொழுவ’த்திற்குப் போனார். அவளால்தான் இந்த நிைைம ஏற்பட்டது என்று சாடுவதற்காக மனைவியை அழைத்துக்கொண்டு போனாரா? அல்லது ஆலோசனை கலப்பதற்காக அழைத்துச் சென்றாரா என்பது இன்னும் பத்து நிமிடத்தில் தெரிந்துவிடும். ✽

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/194&oldid=1369095" இலிருந்து மீள்விக்கப்பட்டது