பக்கம்:இன்னொரு உரிமை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாசப் பிரிவினை 209

“ஏன்... பேசாம உட்கார்ந்திருக்கிங்க... ஏங்க! ஒங்களத்தான். என்னை விட்டுட்டுப் போகப் போறீங்களா? ஒங்களுக்கும் சம்மதமா, பதில் சொல்லுங்க... ஒங்களத்தான்!”

கிழவர், தள்ளாடி எழுந்து அறையின் மூலையில் கால்கள் நீட்டி கைகளைப் பரப்பி சாய்ந்துகொண்டார்—அப்போதே, மனைவியிடமிருந்து விலகியிருக்க பழகுபவரைப்போல். பிறகு, சிரித்தாரா அழுதாரா என்று அடையாளம் காண முடியாத குரலில் பதிலளித்தார்.

“என்னப்பா செய்யுறது... புருஷன் பெண்டாட்டி விவாகரத்துல... பிள்ளைங்க கஷ்டப்படும். இங்க என்னடான்னா... பிள்ளிங்க கஷ்டப்பட்டு நமக்கு விவாக ரத்து. செய்து வைக்காங்க!”

“அய்யோ! பெரிய பெரிய வார்த்தையா பேசுறீங்களே! ஒவ்வொரு வீட்ல பெத்தவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் நடத்தி பிள்ளிங்க அழகு பாக்கும். ஆனால் நாம் பெத்த பிள்ளிங்க... அட கடவுளே! இதுக்கா ரெண்டு மகன்களப் பெத்தோம்...”

“ரெண்டுபேர மட்டும் பெத்ததுக்கு சந்தோஷப்படுப்பா, மூணு நாலுன்னு பெத்திருந்தால் நம்ம உடம்ப கூறு போட்டு எடுத்துட்டுப் போகனுமுன்னு தீர்மானிச்சிருப்பாங்க! உம்... எல்லாம் நன்மைக்கே.”

“அய்யோ... அப்படிச் சொல்லாதிங்க! ஒங்களை விட மாட்டேன்! உயிர் போனாலும் விடமாட்டேன்! நீங்க இந்த வீடு கட்டுறதுக்காக கார்ப்பரேஷன்காரங்களோட கால் கையை எத்தன தடவை பிடிச்சிருப்பிங்க... ரெண்டுபேருமா கிராமத்தில் இருந்து வந்து குடிசை போட்டு வீட்டு. வேலையைக் கவனிச்சோம்! இந்த வீட்ல இருந்து உங்களை யாராலயும் அனுப்ப முடியாது!”

சி -1.4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/218&oldid=1369411" இலிருந்து மீள்விக்கப்பட்டது