பக்கம்:இன்னொரு உரிமை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நூலிழையில் ஒரு பந்தம்


நாலைந்துபேர் சுமக்கமுடியாமல் சுமந்து முற்றத்தில் சாற்றி வைக்கப்பட்டிருந்த கட்டிலை இழுத்துப் போட்டு அதிலே வைரமணியைப் போட்டார்கள். அவன் கண்கள் மேல் நோக்கிச் சொருகிப்போயிருந்தன. வாந்தி எடுக்கப் போவது மாதிரி வாயைப் பண்ணிக்கொண்டிருந்தானே தவிர, வாந்தி வரவில்லை. வேட்டி சட்டை அனைத்தும் தெப்பமாக நனைந்திருந்தது. நேராகப் பார்க்கும் ஆட்டுக் கிடாமாதிரி கூர்மையான அந்தக் கண்கள் ஒடுங்கிக் கொண்டும், வைரம் பாய்ந்திருந்த அவன் உடம்பு ஆடிக் கொண்டும் இருந்தன. அவனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம்.

அப்போதுதான் மாட்டை அவிழ்த்துக்கொண்டிருந்த அவன் தந்தை மாடசாமி மாட்டை அப்படியே விட்டுவிட்டு மகனிடம் ஓடி வந்தார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவன் கண்களைப் பார்க்கப் பார்க்க ஏதோ ஒரு உண்மை புலப்பட்டதுபோல் தலையில் அடித்துக்கொண்டே "ஐயோ... என் பிள்ளைக்கு கண்ணு சொருகுதே!" என்று கத்தினார்.

சமையல்கட்டுக்குள் துவையல் அரைத்துக்கொண்டிருந்த அவன் அம்மா, அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள்: மகன் படுத்திருந்த கட்டில் காலில் தலையை மோதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/85&oldid=1369091" இலிருந்து மீள்விக்கப்பட்டது