பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

எழுத்தையும் தெரிந்தாள். அவளை நீ, கிட்டுதற்கரிதென்று கருதினாய். துன்பம் பெரிதுற்றாய் அவளோ உன்னைத் தொட்டிழுத்து வலிய அணைத்தாள். இன்பம் பெரிதுற்றாய். அவள் அறிவை உன் அறிவால் அறிந்தாய். ஒரே நேரத்தில் உன் கண், மூக்கு, காது, மெய், வாய், அறிவு அனைத்தும் பேரின்பம் நுகர்கின்றன! இனி,

இப்பேரின்பம் துன்பத்தின் பயன்தானோ என்று கேட்பின், காதல் என்னும் தீயின் பயனே இது! அவள் கிட்டுவாளோ என்று காத்த முயற்சியின் பயனே இப் பேரின்பம்! இதன் பின்னும், அவன் “ஊடல்” ‘பிரிதல்’ என்ற துன்பத்தின் பயனாகவே இன்பத்தை யடைதல் வேண்டும்.

திராவிட நாடு
22-4-1945