பக்கம்:இன்பவாழ்வு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




டும்.

தான்

கO

வாழ்வைப்பேராசையில் - அகங்காரத்தில் தோய விடாது இயற்கை வழிச்செலுத்த முயலல் வேண் சுகமாக வாழவேண்டும் என்ற நினைவின் உதயமே மனிதனைப் பேயாக்கி அவன் வாழ்வைக் குலைக்கிறது. வாழ்வு குலைந்தால் இறையேது? இன்பமேது? பிறர் உழைப்பால் பெறும் பொருளைத் தன்னுடையதாகக் கருதி, அதை மற வழியில் செலவழித்து இறுமாப்புக் கொண்டு திரிபவன் இன்பவாழ்வுக்கு அடி கோலு பவனல்லன். இன்ப வாழ்விற்கு அடிகோலுபவன் சென்றது கருதாமலும் சேர்வது நினையாமலும் மற்றையோர் உழைப்பை எதிர் நோக்காமலும் அடங்கி வாழ்வான்.

பிறர் உழைப்பால்

உழைப்பால் பொருளீட்டுவோனிடம் மன அடக்கம் உண்டாதல் அரிது. மனம்போன வழியெல்லாம் உழலுகிறவன் இறைவனோ

டிசைந்த இன்பவாழ்வை எவ்வாறு நடத்தக்கூடும்? அவன் பணச்செருக்கால் பிறரை அடிமை கொள் ளவும், தான் உல்லாசமாக வாழவும் நினைப்பான்; தன்னைப் பிறர் ஆண்டவன் என்று நினைக்க வேண்டுமென்ற கருத்தும், நினைத்தனவெல்லாம் செய்யவேண்டு மென்ற திமிரும் அவனுக்கு இயல் பாக உண்டாகும். அவன் தன்னுடைய உடலை- பொருளை - ஆவியைக் கடவுளுக்கு அர்ப்பணஞ் செய்யமாட்டான்; அதாவது மற்றவர்க்காகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்பவாழ்வு.pdf/11&oldid=1710623" இலிருந்து மீள்விக்கப்பட்டது