பக்கம்:இன்பவாழ்வு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கச

வேண்டும். காதலின்பமூட்டும் நாயகியை ஒரு நாளும் பெரியோர் இகழமாட்டார். காதலென்பது இருவர் உயிர் பற்றி நிகழ்வது. அவ்வின்பமே பேரின்பமென்பது. காதல் இன்பம் நுகர்வோர் தொகை அருகிவருமிந்நாளில் இக்கூற்று பித்தர் கூற்றாகவே கருதப்படும். ஆன்மநேய ஒருமைப் பாட்டுக்கு அடிகோலும் இல்லறம் இறைவனோடி சைந்த இன்பவாழ்விற்கு அடிப்படை.

பெண் என்பதும் ஏனைய இயற்கைப் பொருள் களைப்போன்றது. மனிதன் இன்பவாழ்விற்கு மண் நீர் காற்று நெருப்பு ஆகாயம் எவ்வளவு இன்றி யமையாதன்வோ அவ்வளவு பெண்ணும் இன்றி யமையாதவள். அவ்வாறே பெண்ணுக்கு ஆணும் இன்றியமையாதவன். இன்றியமையாத பெண்ணை ஆண் வெறுப்பதும் ஆணைப் பெண் வெறும் பதும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வாகும். அவ்வாழ்வில் இன்பம் விளையாது; இன்ப மில்லாவிடத்தில் இறைவனில்லை. இயல்பாக மனிதனுக்கு

.

ஏற்பட்டுள்ள இன்பக் கிளர்ச் சியை அடக்குவதும், ஒருத்தியோடுகூடி உயிர் களை உண்டுபண்ணும் பரோபகாரசிந்தை கொள் ளாது வேசைமாரிடத்தணைவதும், வேறு பல தீயொழுக்கங்களில் நுழைவதும், இயற்கையோடு எதிர்த்துநிற்குஞ் செயல்களாம். இயற்கையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்பவாழ்வு.pdf/15&oldid=1710627" இலிருந்து மீள்விக்கப்பட்டது