பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

1968இல் உலகத் தமிழ் மாநாட்டுக் கவியரங்கத் தலைமை ஏற்றார் .

நூல்கள் : முதல் வெளியீடு-1949 தமிழச்சி-மற்றும்,

பதினைந்து நூல்கள் வெளியிட்டுள்ளார், மொழிபெயர்ப்பு: வித்தோர் உய்கோவின் நாடகம், "காதல் எங்கே?" கீதே மோபசான் கதைகள், பிரஞ்சு தமிழ் அகராதிமுதலியன.

விருதுகள் : 1954ஆம் ஆண்டு பிரஞ்சுக் குடியரசு தலைவர்,

"Ordre de L'Etoile d'Anjouan' என்னும் சிறப்பு விருது அளித்தார்; “புதுமைக் கவிஞர் என்று பாராட்டப் பெற்ற இவர், தெ-ஆ-மா. - தமிழ்க் கவிஞர் மன்றத்தாரால் "கவிஞரேறு" என்றும், புதுவைத் தமிழ்ச் சங்கத்தாரால் “பாவலர் மணி"என்றும் 1972-ஆம் ஆண்டில் சிறப்பிக்கப் பெற்றார். 1975இல் “பாட்டரங்கப் பாடல்” எனும் நூலுக்குத் தமிழக அரசின் முதற் பரிசு, 1979இல், தமிழக அரசின் பாவேந்தர் விருது.

மறைவு : "கெஞ்சி, வாழ்தல் நஞ்சினுங் கொடிது"

"கோடி கொடுப்பினும் கொள்கையிற் கோடேல்" என்று தாம் உரைத்தவாறு வாழ்ந்த கவிஞரேறு அவர்கள் 7---8---74இல் மறைந்தார்.

*