பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. காதல் வாழியவே!

பொன்னைப் போலப் பூத்தது காடு!
சின்னச் செடியில் சிறுசிறு கூண்டு
புல்லைக் கிழித்துப் புட்கள் புனைந்த
இல்லம்! இதைப்போல்இயற்றுவார் யாரே?
பாட்டொலி, பேடைப் பறப்பொலி வீச்சுக்
கேட்டால் இனிக்கும் செந்தேன்! செந்தேன்!!
நெளிநீர் ஓடை நிமிர்ந்த தாமரை
ஒளிமலர் அழகின் ஓவியம்! அல்லிச்
செவ்விதழ் விரிப்பே செந்தீ நெருப்பாம்!
அவ்விதழ் ஊடே அலையும் வண்டுகள்
காட்டீந் தின்பழம்; களாப்பழம் ஆம் ஆம்!
மீட்டும் இசையோ மென்யாழ் ஒலியாம்!
தென்றல் சிறுபுதர் அலைக்க அலைக்க
ஒன்றிய புறவு மணிக்குரல் எழுப்பும்
முல்லை பூத்த முல்லை நாட!

பரிதி ஒளியெனப், பாய்புனல் வளியெனச்,
சுரிதிரைக் கடல்சூழ் தொடர்மலை நிலமென,
விரிவான் வெளியென விளம்பிய யாவும்
அரும்பெருங் காதல் ஆக்கத்தின் விளைவாம்!
நடப்பன, பறப்பன, நகர்வன பலவும்
நடப்பன காதலால்! காதலே முதலாம்!
கிடப்பன மலைகள்! கிளப்பன மரங்கள்!
அடக்கமே காதற்(கு)அடங்குவ துளவே