பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 இன்ப இலக்கியம்

பெயலால் நிறைந்த பெருமலைப் பொய்கை அயலுள மரத்தின் இலை அடர் பாறையை வயற்கரும்பழித்துவருமதயானை மயலால்தழுவும்! வாழிய காதல்!

காதல்! காதல்! காதல் இனிது! காதல் எதையும் கடந்தது காதல்! காதல் உடலுயிர்கண்ணுக்கினிது! காதல் இலையேற்சாதல்இனிதே!

கொன்றவிலங்கின்'ஈனக்குரலைக் குன்றெதிர் ஒலிக்கும்குறுஞ்சுனை யருகில் நின்று பிணையுடல் நீள்கலை வருடும்! என்றும் காதல் இனிதே தோழி!

ஈருடல் ஓருயிர் இணைந்தால் இனிதே! வார்புனற் செடிபோல் வளர்ந்தால் இனிதே! கூர்விழி ஒளிபோற்கூடில்இனிதே! வேர்விடாக் காதல் வீண் பேச்சன்றோ?

செக்கர் சிந்திய செந்நிறஒளியில் கொக்குப்பேடைகுரல்விளிகாட்டும் அக்கம் பக்கத் தடர்கிளைப் புட்கள் செக்கச் சிவக்கும் தீச்சுடர்மாலை!

செக்கச் சிவக்கும் தீச்சுடர் மாலை மிக்குக் காதலர் மேனியைத் தீய்க்கும்! மிக்குக் காதல் மேவா தோர்க்கே. அக்கறை யேனோ செக்கர் மீதே?

என்று நான் வெட்டி இடையிடைப் பாடக் குன்றெழுமதியக்கோதைநல்லாள்,