பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இன்ப இலக்கியம்

கைத்தலம் வைத்தென் கரிய கூந்தலைத் தொடுவான் போலத் தொட்டான் மெய்யை!

நெருப்பால் அவனை எரிப்பாள் போலச் சொன்னேன் சுடுசொல்; சொன்ன சொல் அறியேன்! சிரித்தான்; என்னை இறுக அணைத்தான்! விடு! விடு!’ என்றேன் வெறுப்பாய்! ஆனால், தொடு தொடு!" என்றதென் துணிவிலா நெஞ்சம்! அவனை நான்:என்னென் றுரைப்பேன்! என்னென் றுரைப்பேன்!

பொன்னெழில் சிந்தும் புதுஞா யிறுபோல் முன்னர்த் தோன்றும் அவன்முகப் பொலிவு! குறிஞ்சி நாட்டுக் குன்றம் அவன் தோள்! குளிர்தேன் அவன்விழி கொடும்தீ சொற்கள்! அளிசெய் உள்ளம்! அடங்கார்க் கோபுலி! தொட்டான் என்னைத் தொட்டான் உளத்தைக்! கட்டுக் கடங்கா முரட்டுக் காளையின் இருகை அணைப்போ இனிதே! இனிதே!

என்றனள், அவன்வாழ் இடத்தை நோக்கினாள்!

ஒன்றிய உளத்துக் காதல் இனிதே! இனிதே! எவற்றினும் இனிதே!