பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரு வழி உரை!

17
    கலையோடு மான்கள் இலக்காட்டைத் தாவும் 
    மலேச்சாரற் கொம்பின் தலைப்பூத்த பூப்போல் 
    நிலையற்றேன் தோழா அலைமோது துள்ளம்! 
    
    வரையூடி நீலக் கடலாடிச் சீறி 
    இரைந்தோடும் வானக் கருமேகம் போல் நான் 
    நிரையற்றேன் தோழா புரையோடிற் றுள்ளம்!
    இழிந்தோடும் பாம்பாய் வழிந்தோடும் 
    ஓடை வழிப்பட்ட கொம்பு சுழிப்பட்ட நீர்போல் 
    தொழிலற்றேன் தோழா வழியற்ற தாலே!
    மலேச்சாரல் புன்செய் அலேக்காற்று மூங்கில் 
    குலேவிட்ட வாழை குருத்தோலே செந்நெல் 
    உலேப்பட்ட பொன்போல் அலேப்பட்டேன் தோழா !
    களம்வென்ற கோட்டுக் கருமேக யானை 
    குளம்மூழ்க, அந்தக் குளம்பெற்ற நீர்போல் 
    உளம் நொந்தேன் தோழா! அலமோது துள்ளம்!
    கார்கண்டு வித்தி மழைபொய்த்துப் போனபின் 
    நீர்பார்த்தே ஏங்கும் வறியன் உழவன் போல் 
    சீரற்றுப் போகும் அவளில்லா வாழ்க்கை
    வளர்வேனிற் காலம்போய் மாறிப் பொலிவிழந்த 
    குளிர்மர நீள்சோலே, குன்றம், குளம்போல் 
    வளமற்றுப் போகும் அவளில்லா வாழ்க்கை!
    அரும்பெரும் மக்கள் அணியணியாய்க் கூடித் 
    திருவிழாச் செய்து முடித்த இடம்போல் 
    உருவற்றுப் போகும் அவளில்லா வாழ்க்கை!