பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இன்ப இலக்கியம்




 இதற்குமுன் வந்தறியாப் பட்டணத்தில் உற்றார் 
 புதுக்குடியைத் தேடுவான் போல் தேடி 
 மதுநாறும் பூச்செடிகள் மனைமுன்னர் ஒர்பால் 
 ஒதுக்கிடத்தில் ஊமைபோல் நிற்கின்றான் அக்கா!
 பெற்றதெல்லாம் இந்தப் பெருவுலகிற் கேயளித்து
 வற்றி யுலர்ந்த ஆறுபோல் நாம்வாழும்
 சிற்றுர்த் தெருவு கிடக்க, அத்தெருவிற் 
 பெற்றிழந்தான் போலப் பேசாமல் நிற்கின்றான்!
 குன்றச் சிறுகல் குளம் நீந்தி ஆடல்போல் 
 கன்றீன்ற நாகு தலைமூழ்கிக் காதாட்ட 
 ஒன்றிரண்டு செண்டை ஒடி வருமளவும் 
 நின்றிருக்கும் கொக்கேபோல் நிற்கின்றான் அக்கா!
 உணவைப் பொதுவாக்கி உண்பிக்கச் செய்யும் 
 குணமிலா அரசியலார் சீர்கெட்ட கொள்கைபோற், 
 பணம்பதுக்கும் செல்வர் வழிபார்க்கும் கள்வன்போல் 
 மணம்நாறும் சோலே வழிபார்த்து நிற்கின்றான்! 
 எனைவளர்த்த பொன்னி குடிவளர்க்கும் நாட்டில் 
 மனைதோறும் கிள்ளை வண்டமிழைப் பாடப்  
 புனையிழையார் இசைபயிலும் பொதுமன்றத் துள்ளே
 வினையாயும் ஒற்றன்போல் மெல்ல நுழைகின்றான்! 
 செந்தமிழர் பூங்கொடிகள், மயிலினங்கள், திங்கள், 
 நந்தீன்ற முத்துப்பல் நகைகாட்டி விளாங்காய்ப் 
 பந்தாடும் கூடத்துள் வந்துவந்து நின்று 
 நொந்தினத்த உளத்தோடு நோக்குகிறான் அக்கா!