பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. அவனில்லா வாழ்க்கை!



  கெண்டை விழியே! கிளிமொழியே! என்தோழி! 
  பண்டெழுந்த நற்பாடல், பழந்தமிழின் இனிமையெலாம் 
  கொண்டிருக்கும் எனதன்பன் கொல்புலியைத்
                                              [தேனூற்றிக் 

  கிண்டி யெடுத்த அமுதைக், கீழ்க்கடலிற் - 
  கண்டெடுத்த முத்தைக், கற்கண்டை, ஒளிமணியைக் 
  கண்டாயா சொல்லேன் கட்டிக் கரும்பை? 
  உயிரை, உடலே, ஒளிசெய்யும் பரிதியை, 
  அயர்வைத் துரத்தும் அடர்கிளேப்பூங் காற்றைப், 
  பயிர்விளேக்கும் மாமழையைப், பசுங்குன்றைப், புளிக்காத் 
  தயிர்போல் இனிக்கும் தமிழ்ச்சொல் லழகனைக் கண்டாயா? 
  சொல்லேன்! கலங்குதடி என்னுள்ளம்!
  அன்பன் மறைபொருளே அறிந்து பிறர்க்குரைக்கும் 
  துன்பம்செய் தோழன் தொடர்புபோல், என்நெற்றி 
  இன்பம் பெருக ஒளிபெருக்கி இல்லாக்கால் - 
  துன்பம் விளக்கும் பகையாகத் தோன்றியதே!
  அருகிருக்க நண்பர் பெரும்புகழை ஏற்றிப் 
  பெருங்குறை அவர்மறையப் பேசுகின்ற புல்லர்போல், 
  கருங்குவளைக் கண்கள் காட்டிக் கொடுக்கும் 
  பெரும்பகைபோற் பின்தொடர்ந்து வந்ததடி தோழி!