பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28,

இலக்கிய இன்பம்

அன்னத்தைப் போலும், அழகுப் பிடிபோலும், மின்னல் இடிவிளைக்கும் முகிற்குலத்தைக் கண்டாடும் சின்ன மயில்போலும் சாயலள் உன் தலைவி! கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?

மின்னலைப் போலும், வேல்விழியார் தம்பற்கள் தன்னகத்தே கொண்ட முல்லைக் கொடிபோலும் சின்னஇடையுடையாள்உன் தலைவி!அன்னாளைக் கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?

கூரம்பு போலும், குளத்து மலர் போலும், நீர்வாழும் கெண்டை நிழல்மா வடுப்போலும் சீர்பெற்ற கண்ணாள் உன் தலைவி அன்னாளைக் கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?

பொதிகை வளர்சந்தின் புதுப்பலகை போலும், மதுமலர்சூழ் ஓடை வாய்த்த மலர்போலும், புதுமைக் கவிபோலும் கன்னத்தாள் உன் தலைவி ! கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?

வெண்சங்கைப் போலும், விளைகமுகு போலும் , மண்குடத்து வாய்போலும் கழுத்துடையாள் உன் தலைவி! புண்செய்தாள் நெஞ்சில்; போக்கும் மருந்தவளே! கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?

நீர்நிறைந்த பொய்கை நிமிர்ந்தவெண் தாமரையின் சீரரும்பு போலும், செப்புச்சிமிழ்போலும் - வாரணிந்த மார்புடையாள் உன்தலைவி! அன்னாளைக் கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?