பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9. பூட்டிடுமின்

 செடியின்ற போழ்தின் சிறுநகைக் கேங்கி விடியல் இசைபாடி மெல்ல நகைகாட்டி
முத்தம் நனியீன்று மொக்கின் முகம்மலர்த்தி
நித்தம் மதுஉண்ணும் வாய்ப்பிருக்க வண்டினங்க்ள் ஓங்கி வளர்ந்த உயர்மலேயிற் கார்க்கூட்டம்
தேங்கி இருந்து செழுங்காற்றல் தாக்குண்டே
உச்சி புகையும் உயர்மலேயின் தீஅணைக்க
நச்சிவரும் நீள்அருவி நன்னீர் முகக்க
மயில்போல் படரும் மலேநாட்டுப் பெண்கள்
இயல்விழியை மொய்த்துப்பின் ஏமாறும் நாடா! கேள்!

 காடென்றும், உளிப்போன்ற கல்லென்றும் பாராது தேடிவரும்செய்கிை தித்திக்கும் செழுந்தேனே!
வாடா மலர்ஒத்த மான்விழியாள் உன்தலைவி
கூடா ஒழுக்கமெனும் ஊர்வாய்க்குப் பூட்டிடுமின்!

 ஆறென்றும், நீர்என்றும், அரவென்றும் கலங்காமல்
தேறி வரும்செய்கை, தித்திக்கும் செழுந்தேனே
'வேறானைள்'எனும்சொல் வெறும்வாய்க் கவல்போலும்
கூறித் திரியுமிந்த ஊர்வாய்க்குப் பூட்டிடுமின்!