பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

யாப்பணியைத் தொன்னூலை அவர் விளக்கக் கேட்டேன்
யார்இனிமேல் அவர்போல எனையூக்க வல்லார்?
காப்பணியாய் எனக்கிருந்தார்; நற்கவிதை யாக்கும்

கலைச் செறிவை நனிவிளக்கி எனைஎழுதச் செய்தார்”
இவ்வடிகள் பாவேந்தரோடு இவர் கொண்டிருந்த தொடர்பைக் காட்டும்—

அலுவல் : 1937இல், ரூ 25.75 சம்பளத்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார்.

காரைக்கால் புதினக் கல்லூரி, புதுவைக் கலவைக் கல்லூரி
ஆகியவற்றில் பேராசிரியராக இருந்தார். 1971இல் ஓய்வு பெற்றார்.

கவிதை : முதற்பாடல்; “பாரதிநாள் இன்றடா!

பாட்டிசைத்து ஆடடா!”,

“தமிழன்” இதழில் 1938இல் வெளியானது. ‘ரமி’ மற்றும் வேறு புனைபெயர்களில் எழுதத் தொடங்கினர். “வாணிதாசன்” என்ற பெயரே நிலைத்தது.

பொன்னி, தமிழன், காதல், திராவிடநாடு, முத்தாரம், முரசொலி, மன்றம், குயில், திருவிளக்கு, செண்பகம், நெய்தல், கவிதை ஆகிய இதழ்கள் இவர் கவிதைகளைத் தாங்கி வந்தன.

சாகித்திய அகாடமியின் “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” தென்மொழிகளின் புத்தக வெளியீட்டுக் கழகத்தில் “புதுத் தமிழ்க் கவிமலர்கள்,” இன்னும் பல்வேறு தொகுப்பு நூல்களில் இவர் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உருசியம், ஆங்கிலம், ஆகிய மொழிகளில் இவருடைய பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

திருச்சி, கோவை ஆகிய இலக்கிய மாநாட்டுக் கவியரங்குகளில் பரிசு பெற்றுள்ளார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_இலக்கியம்.pdf/9&oldid=1387031" இலிருந்து மீள்விக்கப்பட்டது