பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

இன்ப

திளைத்தனர். வளத்தில் களித்தனர்; மாறாத வசந்தமாக அவர்கள் வாழ்வு இருந்ததென புதியதோர் வரலாறு தீட்டப்பட வேண்டும்! அதற்காகத்தான் கருவூலம், செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன!

விக்: அறிவானந்தரே! உம்மை நான் அழைத்தது வேதாந்த விசாரணைக்கல்ல; நாட்டை பேராபத்து சூழ்ந்துவிட்டது. அதைப் போக்க வழி காண வேண்டுமென்பதற்காக! அறிவியல் பெருமானே! உமது உதவி இருந்தால் மட்டுமே நாடு தப்பும்; திருநாட்டு மக்கள் உரிமையுடன் வாழலாம்.

அறி: நான் என்ன செய்ய முடியும்! வாளெடுக்க முடியாதவன்! போர்ச்செயல்கள் அறியாதவன்!

குமார: படைகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல், வீரர்களை மிரண்டோடச் செய்யும் வலிமை, நமது நாட்டுக்கு வெற்றி தேடித் தரும் வாய்ப்பு உங்களிடம் இருக்கிறது தாத்தா!

அறி: என்னிடமா? மன்னா! சொல்வது விளங்கவில்லையே!

விக்ர: (குறுக்கிட்டு) நீங்கள் தயாரித்துள்ள நாசப் பொடியை எங்களிடம் தாருங்கள்! அதைத் துணையாகக் கொண்டு நான் வெற்றி காண்பேன்!

அறி: எரிச்சல் பொடி எவ்வாறு உங்களுக்கு உதவப் போகிறது, விக்ரமரே?

விக்: எதிரிப் படைகள் வேகமாக வரும்பொழுது, ஏராளமாகப் பொடிகளைத் தூவினால், வேதனை தாங்காமல் அவர்கள் ஓடி விடுவார்கள்!

அறி: ஐயோ, எரிச்சல் பொடியின் கொடூரத்தை நீங்கள் அறியமாட்டீர்கள் அது பட்டால் ஆறாத இரணம் உண்டாகும். வேதனை தாளாமல் வாழ்நாள் பூராவும் துடித்துக் கொண்டிருக்க வேண்டும்.