பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

இன்ப

காட்சி—39

[திருநாட்டு எல்லைக்கப்பால், மல்ல நாட்டுப் படைகள் குவிந்து கூடாரங்களமைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் படைத்தலைவன் நின்று, கூடாரங்களின் அமைப்பு முறைக்கு யோசனைகள் வழங்கிக் கொண்டிருக்கிறான். கூடார அமைப்பே ஒரு போர் வியூகம் போல் இருக்க வேண்டுமென்ற, அவனது எண்ணத்தை விளக்கி, அதற்கேற்றார் போல அமைக்கக் கூறுகிறான். கூடாரங்கள் அந்த முறைப்படியே அமைந்து கொண்டிருக்கின்றன. வீரர்கள் இருவர் கார்மேகத்தை அழைத்துக் கொண்டு அங்கு வருகின்றனர். அவரைக் கண்ட படைத்தலைவன் எதிர் சென்று அழைத்து—]

படை: வாருங்கள் கார்மேகம்!

[என்று கூறி அவரை அணைத்துக் கொண்டு]

வெற்றி வீரராக வந்திருக்கும் உங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் தெரியாமல் தடுமாறுகிறேன். உங்களது உதவிக்கு மன்னர், பெரிதும் நன்றி கூறும்படி கூறினார். படைவீரர்கள் புதுத்தெம்புடன் இருக்கிறார்கள்.

கார்: மல்லநாடு வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கூட மேம்பட்டது என்பதை நிரூபித்துவிட்டு வந்திருக்கிறேன் தளபதியாரே!

தள: அரும்பாடு பட்டிருக்கிறீர்கள்!

கார்: கொஞ்ச நஞ்சமல்ல; எத்தனை இரவுகள் கண் விழித்திருக்கிறேன்! என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டேன். உயிருக்கே இறுதி என்ற உச்சக் கட்டத்தில் வெற்றி கிடைத்தது!