பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

129

மாதவன் ஓடி வந்து நிற்கிறான் அங்கு. அவன் உடலெங்கும் பயங்கரமான இரணங்கள் தோன்றி இருக்கின்றன. பரிதாபமாகக் காணப்படுகிறான் அவன். 'ஐயோ, அம்மா!' என்ற முணுமுணுப்பு அதிகமாக இருக்கிறது.]

மணி: மாதவா! என்ன அலங்கோலம் இது? புண்கள் எப்படி வந்தன? நாசப் பொடியால் ஏற்பட்ட புண்களைப் போல் தெரிகிறதே!

மாத: உண்மைதான் மணிவண்ணா! நாசப்பொடியால் வந்த வினைதான் இது. பேராசையால் வந்த பெருநோய்.

மணி: விவரமாகச் சொல்லப்பா...

மாது: மணிவண்ணா! என்னை மன்னிப்பதாகச் சொல்! காட்டிக் கொடுத்து விடாதே!

மணி: மன்னிப்பு—காட்டிக்கொடுப்பது! என்ன,இதெல்லாம்?

மாத: மணி, உனக்குத்தான் மாலதியைத் தெரியுமே! அந்த அலங்கார வல்லியின் அழகுபடுத்திய பாடு இது. அவள் தந்த நச்சுக் கருத்துக்களைப் பருகினேன். ஆய்வுக்கூடத்தில் நாசப் பொடியையும் தீப்பொருள்களையும் திருடினேன். ஆயிரம் வராகன் தருவதாகக் கூறினாள் அந்த வஞ்சகி! கார்மேகத்துக்கும், திருமுடியார்க்கும் தருவதற்காகக் கேட்டாளாம்! என்னை ஏமாற்றியது போலவே, மாலதி, கார்மேகத்தையும் ஏமாற்றிவிட்டாள்! நாசப்பொடி என்ற பேரில் போலிப் பொடியொன்றைக் கொடுத்து விட்டாளாம்! தீப்பொருளை மட்டும் திருமுடியாருக்குக் கொடுத்தாள். திருமதி ஒருமுறை, நடன அரங்கில் வரவிருந்த பயங்கரமான பேராபத்திலிருந்து மாலதியைக் காப்பாற்றினாளாம். அதன் காரணமாகவே, மல்ல நாட்டு எதிரிகளுக்கு நச்சுப் பொருளைக் கொடுக்காமல், கைம்மாறு செய்தாளாம் மாலதி. திருமுடியார் மக்களின் ஆத்திரத்துக்கு ஆளாகி, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பின், பயந்து

பூ-160-இ-5