பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

135

அறி: என்னைச் சிறையிலிருந்து விடுவித்து மல்ல நாட்டுப் படைத்தலைவனிடம் போக அனுமதி கொடுங்கள்! நான் அவனைச் சந்தித்துப் போரை நிறுத்துகிறேன்!

விக்ர: மாபெரும் படையால் தடை செய்ய முடியாத ஒன்றை, தனியாகச்சென்று நீர் எப்படி சாதிக்கப் போகிறீர்? இங்கிருந்து வெளியில் போனதும் தப்பி ஓடமாட்டீர்கள் என்பதற்கு என்ன உறுதி?

அறி: சிறு பிள்ளையைப் போல பேசுகிறீர், விக்ரமரே? திருமுடியார் விஷயத்தை நேரில் கண்ட பின்பும் இப்படிப் பேசுவது கேட்டு எனக்குச் சிரிப்பு வருகிறது. இதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லையென்றால், போர், படையெடுப்பு இவைகளால் உண்டாகும் அழிவுக்கு நீர்தான் பொறுப்பாவீர்!

விக்ர: (சற்றுச் சிந்தித்து) உங்களுடன் எல்லைவரை வந்து, எதிரிப் படையிடம் அனுப்புகிறேன்! ஏதாவது துரோகம் நிகழ்ந்தால், உமது மகன், மகள் இருவரும் சிரச் சேதத்துக்கு ஆளாவார்கள்! நினைவிருக்கட்டும்!

அறி: (அலட்சியமாக சிரித்தபடி) திருமதி ! குணாளனைத் தயாராக இருக்கச் சொல்!

காட்சி—43

[ஊரின் புறம். காட்டுப் பகுதி. மாதவனைத் தாங்கியபடியே மணிவண்ணன் நடந்து போகிறான்; நடக்க முடியாமல் தள்ளாடுகிறான் மாதவன்.]

மாத: (தடுமாறியபடி) மணிவண்ணா! இனிமேல் என்னால் நடக்க முடியாது. உடம்பெல்லாம் பற்றி எரிகிறது... வலிதாள முடியவில்லை. ஐயோ! அம்மா!!

[உட்கார்ந்து விடுகிறான்.]

மணி: என்ன செய்வதென்றே புரியவில்லையே [என்று கற்றும் முற்றும் பார்க்கிறான். ஒரு பக்கத்தில் செடி கொடிகள் படர்ந்திருக்கின்றன. அங்கே சென்று எதையோ தேடுகிறான். ஒரு கொடியிலிருந்து சில பச்சிலைகளைப் பறித்துக் கொண்டு வந்து...]