பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

இன்ப

[என்று நினைத்துக் கொண்டே, தான் அரண்மனைக்குச் செல்லுமுன், குறிப்பேட்டை வைத்த இடத்தில் சென்று, அதனைத் தேடுகிறார். அது, அவர் வைத்த இடத்திலேயே இருக்கக் கண்டு மகிழ்ந்தவராய்...]

அறி: குறிப்பேடு இருக்கிறதே குணாளா!

[எடுத்துக்கொண்டு அவர்கள் இருக்குமிடத்துக்கு வருகிறார்.]

குணா: (மகிழ்வோடு) எங்கே அப்பா இருந்தது?

அறி: நான் வைத்த இடத்தில்தான் இருந்தது.

குணா: நீங்கள் வைத்த இடத்திலா? அப்படியானால் நீங்கள் இதை எடுத்தீர்களா அப்பா?

அறி: ஆம், குணாளா! அரண்மனைக்குச் சென்ற அன்று அதனை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்!

குணா: நான் பயந்தே போய்விட்டேன் அப்பா! சதிகாரர்கள் நம் அறிவாலயத்துக்குள்ளேயே புகுந்து விட்டார்களோ என்று அஞ்சினேன்!

அறி: இதுபற்றி அப்போதே நீ என்னிடம் கேட்டிருக்கலாமே!

குணா: கேட்டிருக்கலாம்! சரியான மனநிலையில் நீங்கள் இல்லையேயென்று...

அறி: பைத்தியக்காரப் பிள்ளை நீ!

குணா: மன்னித்து விடுங்கள் அப்பா! உங்கள் மீதே கூட நான் சந்தேகப்பட்டேன்! இவ்வளவு தூரம் கேட்டும் திருநாட்டுக்கு நீங்கள் உதவி தரமுடியாது என்றதும், மல்ல நாட்டோடு உங்களையும் இணைத்து...

அறி: (சிரித்துக் கொண்டு) ஊரே அப்படிச் சொல்லி விட்ட பிறகு, நீ சொல்ல நினைத்ததில் நான் குறை காணமுடியுமா குணாளா?

குணா: மாதவன், மணிவண்ணன்...