பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

147

திரு: அண்ணா, பின்னே உங்களைப்போல் இருக்க வேண்டுமா?

குணா: அவனைச் சொன்னால், திருமதிக்கு வருகிற கோபத்தைப் பாருங்களப்பா!

அறி: இருக்காதா பின்னே! அவளுடைய 'அவர்'டா அவன்! மறுபடியும் கோபம் வருவதற்குள் காலுக்கு விலங்கு போட்டுவிட வேண்டும்!

[என்று குறும்பாகப் பார்க்கிறார். மணிவண்ணனும் குறும்பாக அவளைப் பார்க்கிறான். அவள் தலைகுனிகிறாள்.]

காட்சி—49

[ஆய்வுக் கூடத்தின் ஒரு பகுதியில் மணமேடை அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மணக்கோலத்தில் மணிவண்ணனும், திருமதியும் அமர்ந்திருக்கிறார்கள். மங்கல வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அறிவானந்தர், மணமக்களுக்கு மாலைகள் எடுத்துக் கொடுக்கிறார். மாலை அணிந்துகொண்டு, மணமக்கள், அறிவானந்தரின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர். அவர்களை ஆசீர்வதித்து தூக்கி நிறுத்தி——]

அறி: இன்றுபோல் என்றும் இன்பம் நிறைந்திருக்குமாறு நீங்கள் இல்லறத்தை நடத்திச் செல்ல வேண்டும். வாழ்க்கையினைப் பூந்தோட்ட மென்பவரும் இருக்கிறார்கள்; முட்புதர் என்பவர்களும் இருக்கிறார்கள். அவரவரும் தத்தம் அனுபவங்களைக் கொண்டுதான் அப்படிச் சொல்லி இருக்கவேண்டும். இந்த வேறுபாடுகள் எல்லாம் மிருகங்களுக்குகிடையே இல்லையென்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரச்னைகளை உருவாக்கவோ அல்லது பிரச்னைகளுக்கு ஈடுகொடுக்கவோ வேண்டிய நிலைமைகள் மிருகங்களுக்கில்லை. இதனால் மனிதர்களைவிட மிருகங்கள் சிறந்தவையாகத் தோன்றுகின்றன. ஏற்றிப் போற்றிய வாய்களே தூற்றி இகழ-