பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

இன்ப

திருமதி: அமாவாசையிலே நிலவு ஒளி விட வேண்டும் என்கிறீர்களா அப்பா?

அறிவா: எள்ளி நகையாடுவது எளிது திருமதி! நோக்கத்தில் காணக்கிடக்கும் ஆழ்ந்த பொருளினை உணர வேண்டும். அதற்குத்தான் நான் முயற்சிக்கிறேன்.

[அவர் மகன் குணாளன், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வந்துகொண்டே...]

குணாளன்: இன்னும் உங்கள் முயற்சி வெற்றி பெறவில்லையா அப்பா! அல்லது புதிய முயற்சியோ?

[அவர்களுக்கிடையே அமர்கிறான்]

அறிவா: இது வரையில் வெற்றி பெற்றிருந்தால், இந்தப் போரே நடைபெற்றிருக்காது குணளா! நீயும் அஞ்சா நெஞ்சன் ஆகி இருக்க மாட்டாய்! இப்போதுதான் வருகிறாயா?

குணாளன்: அரசவைக்குச் சென்று விட்டு, அங்கிருந்து நேராக இங்குதான் வருகிறேன்!

அறிவா: போர்க்களத்தில் மிகுந்த சேதமோ?

குணா: பயங்கரமான போர்! எதிர்ப்பு! பல்லாயிரக்கணக்கில் பலி— எதிரிகளுக்கு அப்பா!

அறிவா: எதிரிகளும் மனிதர்கள்தானே குணாளா?

திரு: (குறுக்கிட்டு) மனித உருவத்திலிருந்தால் மட்டும் மனிதர்களாகி விடுவார்களா அப்பா?

அறி: முடியாததுதான்! இதயம் இருக்க வேண்டும்! எண்ணங்கள் சீராக இயங்க வேண்டும்.

குணா: மனிதர்களுக்கு இதயமும் இருக்கிறது. எண்ணங்களும் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த எண்ணங்கள் நல்லனவாக இருப்பதில்லை. நாடு தழுவியயனவாக இருப்பதில்லை. தனக்கு தனக்கு என்கிறார் சிலர்! தமக்கு தமக்கு என்கிறார் சிலர்! சுயநல வடிவத்தில் சுழல்கிறார்கள் மனிதர்கள்!