பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

இன்ப

குணா: அப்புறம், பெற்றோர் பட்ட கடன் தீர்ந்தது; பெரியவன் நான்பட்ட கடன் எஞ்சியது. பட்டாளத்தில் சேர்ந்தேன்; பணியாற்றினேன்! நாடு வென்றது! நலிந்தனர் மக்கள்! நலிந்தவரைக் காக்க நல்வழி தேடும் பகுதிதான் இப்போது...

மணி: நகைச்சுவையோடு நல்ல கருத்தைப் பேசுகிறீர்கள். மகிழ்ச்சியடைகிறேன். நல்ல நண்பர்! இனியவர், நீங்கள்!

குணா: வீட்டுக்கு வாருங்களேன்!

மணி: இன்னொரு நாளைக்கு...எங்கே இருக்கிறீர்கள்?

குணா: அறிவானந்தர் ஆராய்ச்சிக்கூடம் என்று கேட்டாலே போதும்!

மணி: யார்? அறிவானந்தரா? நீங்கள் அவருக்கு...

குணா: எனக்கு அவர் தந்தை!

மணி: அறிவானந்தரின் மகன் குணாளனா? நீங்கள் தானா? அஞ்சாநெஞ்சன் என்ற வீர விருதுக்குச் சொந்தக்காரர் நீங்கள்தானா?

குணா : இவ்வளவு அறிந்து வைத்திருக்கிறீர்கள். அப்பாவை, அறிவீர்களா?

மணி: ஊரெல்லாம் புகழக் கேட்டிருக்கிறேன். அவசியம் பார்க்க வேண்டும்! நாளைக்கே வருகிறேன்!

குணா: கண்டிப்பாக வரவேண்டும்!

காட்சி—17

[திருமுடியார், மடம் ஒன்றில் அமர்ந்திருக்கிறார். விக்ரமனால் வஞ்சிக்கப்பட்டு, கோவில்களின் நிர்வாகத்தை இழந்த பின்பு எப்படியும் விக்ரமனை வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற நோக்கம் அவரைக் குடைந்து கொண்டிருக்கிறது. ஆட்சி