பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

இன்ப

மாலதி! நிலைமை நெருக்கடியாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் வறுமையின் கொடுமையைத் தாளமாட்டாதவர்களாக, ஆண்டவனைக்கூட்ட அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். விக்ரமனின் சுட்டுவிரல் அசைவுகளே சட்டங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. நிலைமை நீடிக்குமானால், விக்ரமன் ஒரு சர்வாதிகாரியாகி விடக்கூடும். அதனால் மன்னர் குமாரவேலனுக்குக்கூட ஆபத்து ஏற்படலாம்...

மாலதி: உணர்ந்திருக்கிறேன், அடியார் அவர்களே! ஏற்பாடுகளைச் செய்திருக்கிறேன். ஆராய்ச்சிக் கூடம் புதிதாகக் கட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்ட பிறகு, இரகசியங்கள், மிகுந்த பாதுகாப்புடன் இருக்கின்றனவாம். இரகசியங்களைக் காத்துக் கொண்டு, எந்த நேரத்திலும் குணாளன் விழிப்போடிருக்கிறானாம்...

திரு: மாலதி! அறிவானந்தரின் இப்போதைய ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. முன்பு கூறினேனே–அது. அதுதான் மாலதி, "நீரும் நெருப்பும்"! அதுவே தேவை. விரைவாகத் தேவை. ஏற்பாடுகளைச் செய்! ஏதேனும் தேவைப்பட்டால் ஆள் அனுப்பு.

[என்று சொல்லி, ஒரு பை நிரம்பிய பொற்காசுகளை அவளிடம் நீட்டுகிறார். நளினமாக அதனைப் பெற்றுக்கொண்டு]...

மாலதி: எத்தனைச் சீக்கிரம் முடியுமோ அத்தனை விரைவில் முடிக்கிறேன். நம்பிக்கையுடன் போய் வாருங்கள்.

[திருமுடியார் போகிறார். கையிலிருக்கும் பையைக் குலுக்கியபடியே நடனம் ஆடத் தொடங்குகிறாள். யாரோ வரும் காலடி ஓசை கேட்கிறது. பையை ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு, மஞ்சத்தில் அமர்கிறாள். அங்கு கார்மேகம் வருகிறார். அவரைக் கண்டதும் அவள், அவரை அறியாதவள் போல 'நீங்கள் யார்?' என்று கேட்கும் பாவனையில் பார்க்கிறாள். கார்மேகம், அதை அலட்சியப்படுத்திவிட்டு, ஆசனமொன்றில் அமர்ந்த படி...]