பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

99

[என்று ஒரு தூணின் மீது கரித்துண்டு போன்ற இன்னொன்றை எடுத்துத் தேய்க்கிறார். அதிலிருந்தும் நெருப்பு வருகிறது. அருகே இருந்த நெய்க் கொப்பறையை இழுத்து வைத்துக் கொண்டு]

'நெய்யிலிருந்தும் கூட நெருப்பு வருகிறது பாருங்கள்!' என்று கொப்பறையில் ஒரு துண்டைப் போடுகிறார். நெய் பற்றி எரியத் தொடங்குகிறது! கூட்டத்தில் கூச்சல் கிளம்புகிறது!

திருமுடியாரே! எத்தனை முறை எங்கெங்கிருந்தெல்லாம் நெருப்பு வந்தது! ஒரே ஒருமுறை! நின்ற இடத்திலிருந்து

விக்ர: பூஜ்யரே! இழந்த உன் பெருமைகளையெல்லாம் மீண்டும் தருகிறேன்! பறித்துக் கொண்ட நிலங்களையெல்லாம் உம்முடைய ஆதிக்கத்துக்கே திரும்பவும் அளிக்கிறேன். தீயைக் கூப்பிடுங்கள்!

[என்கிறார். திருமுடியார் மயங்கிக் கீழே விழுந்து விடுகிறார். கூட்டத்தின் குரல் உச்சிக்குச் செல்கிறது! கூட்டத்தில் ஒருவன்—]

ஒருவன்: கடவுளின் பேரால் கயமை புரிந்த கயவனைக் கொல்லுங்கள்! குத்துங்கள்! வெட்டுங்கள்! போலி வேடம் போட்டு புதுமைவிளைப்பதாய்க் கூறிய கோமாளியைக் கொல்லுங்கள்!

[என்று கூச்சலிடுகிறான். கூட்டம் முன்னிலும் அதிகமாக நெருங்கி வருகிறது!]

விக்ர: சபாஷ், அறிவானந்தரே! புண்மைச் செயலை, போலித்தனத்தை தங்கள் அறிவாற்றல் கொண்டு கண்ட ஆராய்ச்சித் திறனால் பொசுக்கிப் போட்டு விட்டீர்கள். பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!!

[கூட்டம் திருமுடியாரைக் கொலை செய்ய வேண்டும் என்று நெருங்குகிறது.]