பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரைக் கண்டேன்'

கார் காலம் வந்துவிட்டது. எங்கும் மழை பெய்து நிலம் குளிர்ந்திருக்கிறது. காடும் அதைச் சார்ந்த பகுதியுமாகிய முல்லை நிலத்தில் எங்கே பார்த்தாலும் ஒரே பசுமைக் காட்சி. இயற்கையாகவே அழகுடைய முல்லை கிலம் இப்போது பின்னும் பேரழகு பெற்று விளங்கு கிறது. பூமி யெல்லாம் செம்மண் நிலம். எங்கே வெட்டிலுைம் செவ்வரக்கைப் போல இருக்கும் மண்ணேக் காணலாம். அரக்கைப் போன்ற செங் நிலத்தில் பெரிய வழிகள் இருக் கின்றன. வழிகளின் இரு மருங்கும் மரமும் செடியும் கொடியும் வளர்ந்திருக்கும். காயா மரங்கள் முல்லே கிலத்துக்கு உரியவை. அவை மழை பெய்தமையால் நன்முகத் தளிர்த்துப் பூத்துக் குலுங்குகின்றன. லே கிற மலர்கள் நிறைய மலர்ந்திருக்கின்றன. மலர்ந்த மலர்கள் உதிர உதிரப் புதிய மலர்கள் பூக்கின்றன. அப்படி உதிர்ந்த மலர்கள். செங்கிலப் பெரு வழியில் படர்ந்து கிட்க்கின்றன. செம்மண் தரையில் லேவிற மலர் ”பரவிக்கிட ந்தால் அத எடுப்பாகத் தெரியுமல்லள்.?

115,