பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ ira må

மழைக் காலத்தில் காடுகளில் இந்திர கோபப் பூச்சிகள் தரையில் ஊரும். செக்கச் செவேலென்ற கிறமும் பட்டுப் போன்ற மென் மையும் உடைய அந்தப் பூச்சிகளைப் பட்டுப் பூச்சி யென்றும் சொல்வதுண்டு. ஈயல் மூதாய் என்று புலவர்கள் சொல்வார்கள். அந்த இந்திர கோபப் பூச்சிகள் முல்லை கிலத்து வழி மு. மு.வ தும் ஊர்கின்றன. ஊரும்பொழுது கோடு கிழித்தாற் போன்ற சுவடுகள் உண்டா கின்றன; கோலம் போட்டாற் போன்ற கீற்று கள் அமைகின்றன. சேற்றிலும் மணலிலும் நண்டும் நத்தையும் ஊர்ந்து செல்லும்போது சுவடுகள் கோடு கோடாக அமைவதைப் பார்த் திருக்கிருேம் அல்லவா? இங்கே செங் கிலப் பெரு வழியில் பல இந்திரகோபப் பூச்சிகள் ஒரே கூட்டமாக ஊர்கின்றன; ஒருங்கே ஊர் கின்றன; வரி (கோடு) அமைய ஊர்கின்றன. அப்படி ஊர்வதை வரித்தல் என்று சொல்வார் கள். ஈயல் மூதாய் பல இந்தப் பெரு வழியில் வரிக்கின்றன. முன்பே காயா மலர் உதிர்ந்து பாவிக் கிடக்கும் அக்த வழியில் இந்திரகோபப் பூச்சிகள் ஊர்கின்றன. காயாம் பூ கரு நீல நிறமானவை; இந்திரகோபப் பூச்சியோ இரத் தம் போல நல்ல சிவப்பு நிறம் உடையவை. இவை இரண்டையும் கலந்து பார்ககும்போது

116