பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

அகநானூற்றின் முதற் பாட்டை மாமூலனர் என்ற புலவர் பாடியிருக்கிருர். மாமூலனருக்குப் பழனியில் வாழ்ந்த சிற்றரசனகிய ஆவியென்பவனேப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தலைவனேப் பிரிந்து வருந்தும் கலேவி, ' என் காதலர் என்னேப் பிரியமாட்டேன் என்று முன்பு சொன்னுரே; அதை இப்போது மறந்து விட்டாரோ?' என்று தன் தோழியிடம் சொல்வதாகப் பாட்டு அமைங்கிருக்கிறது.

பிரியாமல் இருப்போம் ' என்று தலைவன் சொன்ன போது, அதற்கு ஒர் உவமையும் சொன்னதாகத் தலைவி கூறுகிருள். சாணே பிடிக்கிறவன் அாக்கையும் பிசின் முதலியவற்றையும் சேர்ந்து இரண்டு கல்லே ஒட்டிச் சானேக் கல்லே அமைப்பான். அந்தக் கற்கள் முன்பு தனித்தனியே இருந்தாலும் ஒட்டின பிற்பாடு பிளவு படாமல் ஒன்றுபட்டே இருக்கும். அந்தச் சானேக் கல்லேப் போல நாமும் வெவ் வேருக இதுகாறும் இருந்தாலும் இனிமேல் பிரியாமல் இருப்போம்' என்று தலைவன் சொன்னனும்.

சிறுகா ரோடன் பயிளுெடு சேர்த்திய

கற்போற் பிரியலம் என்ற சொல்தாம்

மறந்தனர் கொல்லோ என்று தலைவி கடறி வருந்துகிருள்.

இந்த இடத்தில் புலவர் தம்முடைய அன்புக்கு உரியவனை ஆவியின் பெயரை ஒட்ட வைக்க வழி செய் கிருர். பழனி மலைக்குப் பழங் காலத்தில் பொதினி என்ற பெயர் வழங்கியது. அது ஆவிகுரிய மலையல்லவா? ஆவிக்குரிய பொதினி மலையில் சானேக்காரன் பிசினேக் கொண்டு சேர்த்திய கல்லேப் போல என்று சானேக் காானுக்குப் பொதினியையும், பொதினிக்கு ஆவியையும் அடைகளாக்கிப் பாட்டுக்குள் ஆவியை நுழைத்துவிடுகிரு.ர்.

9