பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தேரைக் aమrGL** ------...-- رح*.-سم ----۔-- .

லே மணியும் பவளமும் ஒன்ருகக் கிடப்பது போலத் தோன்றுகின்றன. லே மணியையும் பவளத்தையும் இடையிடையே கோத்து வளை, மாலே முதலிய அணிகளை இயற்றுவதுண்டு. அப்படி நீலமணியும் பவளமும் இணேந்த இணேப்பை மணிப்பிரவாளம் என்றும், மணி மிடை பவளமென்றும் சொல்வது வழக்கம். காயாம் பூவும் ஈயல் மூதாயும் கலந்து மணிமிடை பவளம் போலக் காட்சி அளிக்கின்றன.

இத்தகைய காட்டு வழி, தன்னுடைய எல்லேயிலே ஒரு குன்றத்தைக் கொண்டிருக் கிறது. சிறிய குன்றை வளைந்து அந்த முல்லை நிலம் இருக்கிறது. அழகிய காடு அது. மாங் கள் செறிந்து வளர்ந்திருப்பதல்ை மற்ற இடங் களில் எளிதிலே செல்வது போல அந்தக் காட்டுக்குள் செல்ல இயலாது; அது செல்லு தற்கு அரிய இடங்களை உடையது. இன்னும் மக்கள் புகாமல், அவர்கள் காற்றே படாமல் உள்ள பல இடங்கள் இந்த அடர்ந்த காட்டுக் குள் இருக்கின்றன. குன்றத்தைச் சூழ்ந்த அழகிய காட்டு நிலத்தின் அரிய இடங்களிலே மான்கள் உல்லாசமாக வாழ்கின்றன. ஆண் மானும் பெண் மானும் ஒருங்கு இயைந்து வாழ் கின்றன. மென்மையான பிணேயைத் தழுவி ஆண் மாகிைய இாலை அங்கும் இங்கும் ஒடு

117