பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தேரைக் ore...so مرs مرہب. ہمs.ہ-...م ہ..ہمہ:...سہ مر.م

இருந்தாலும் அவன்பால் இருந்த காதல் அவளைப் படாத பாடு படுத்தியது. அவளே அறியாமலே சோர்வு உண்டாகியது. முகத்தில் இயற்கையாக இருந்து வந்த பொலிவு இல்லை. ஆயினும் செய்ய வேண்டிய கடமைகளைத் தக்க வண்ணம் செய்து வந்தாள். எப்படியும் தன் காதலன் குறிப்பிட்ட காலத்தில் வந்து விடு வான் என்ற நம்பிக்கை இருந்தமையால் பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து வந்தாள். கார் காலம் எப்போது வரும் வரும் என்று அவள் எதிர் பார்த்துக் கொண்டே இருந்தாள். கார் காலம் மெல்ல மெல்ல வந்தது. அதன் அடையாளங்களாகிய மழையும் முல்லே மலரும் காயாம் பூவும் வந்தன. கலேவன் இன்னும் வரவில்லை. இப்போதுதானே கார் காலம் அடியெடுத்து வைக்கிறது? இன்னும் சரியானபடி வந்து புகவில்லை என்று தானே சமாதானம் செய்து கொண்டாள்.

கார் காலம் கன்ருகவே வந்து விட்டது. காட்டுக்குப் போய் வந்தவர்கள் எல்லாம் கார் காலத்துக்குரிய அடையாளங்கள் அனைத்தும் தோன்றி யிருப்பதைப் பேசிக்கொள்கிருர்கள். அந்தப் பேச்சுத் தலைவியின் காதில் விழுகிறது. அதோடு முல்லைப் புலத்தில் ஆக்களைப் பரப்பிக் கோவலர் நறும் பூவைச் செருகிக்

123