பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

கரடி புற்றுக்குள்ளே கையை விட்டுத் தன் நகத்தால் அதற் குள்ளே கிடக்கும் பாம்பை உசுப்பி விடுகிறது. கடு இரவிலே சுற்றிலும் உள்ள இருள் குட்டி போட்டாம் போன்று தோன்றும் கரடியைக் குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை ' என்று புலவர் சொல்கிறர். இது ஒரு பக்கம் நிகழ்கிறது. மற்ருெரு பக்கம் பெரிய காட்டுப் பன்றியை ஒரு புலி அடித்துக் கொன்று காதரவென்று இழுத்துக்கொண்டு செல்கிறது. அப்பப்பா ! அந்த இடம் முழுவதும் ஒயே புலால் நாற்றம்! வேறு ஒரு பக்கத்தில் ஆண் யானே வாழை வளரும் பள்ளத்தில் விழுந்து பிளிறு கிறது. அதை மீட்பதற்காக அதன் பிடி, மாங்களே யெல்லாம் முறித்துப் பள்ளத்திலே படியாகப் போடுகிறது. இந்தச் சத்தத்தால் மலேச்சாால் முழுதும் கிடுகிடாய்க் கிறது.

இப்படி இயற்கைத் தேவியின் எழிலில் இரண்டு வகை களே இந்த இரண்டு பாடல்களிலும் காண்கிருேம். ஒன்று இனிய அழகு;மற்றென்று பயங்கர அழகு.முதலிலே சொன் னது அற்புதம் அல்லது மருட்கைச் சுவையைத் தருவது; இரண்டாவது பயானகம் அல்லது அச்சச் சுவையைத் தரு வது. இரண்டும் சுவையைத் தருவனவே. பராசக்தியே கண் கவர் அழகுத் திருக் கோலத்தில் காமாட்சியாகவும், உள்ளத்தை நடுங்கச் செய்யும் பயங்கரக் கோலத்தில் காளி யாகவும் காட்சி அளிக்கிருள். இயற்கைத் தேவியும் ஓரிடத்தில் பழமும் தேனும் கடுவனும் மலர்ப்படுக்கையுமாக எழில் திருக்கோலம் கொண்டிருக்கிருள். மற்றேரிடத்தில் ஈசலும் பாம்பும் கரடியும் இருஇ பன்றியும் புவியும் யானையு மாகப் பயங்கரக் கோலம் பூண்டு விளங்குகிருள். உண்மை உலகத்தில் இரண்டு கோலங்களும் இருவேறு அழகை உடையன. கவிதை புலகத்தில் இந்த இருவகைக் கோலங்களின் சொல்லோவியுங்கள் பின்னும் அதிக அழ,

13