பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMAJSJMAMMSMSMSMSMSAJSMAMSMSMSASAMJABJSAAMMSS SMMMMS

6 εάru τοδυ

SJSJSASA SSASAS SSAS SSAS SSAS AAAA S

கைப் பெற்று ஒளிர்கின்றன; போற்றிப் பாராட்டும் வகையில் இல்ங்குகின்றன.

இப்படியே கார் காலத்தில் முல்லே நிலத்தில் பொலியும் அழகை இரண்டு பாடல்கள் சொல்கின்றன. முல்லே மலரும் தேற்ற மலரும் கொன்றை மலரும் மலர்கின்றன; காயாம் பூ மலர்ந்து உதிர்கின்றது. இந்திர கோபப்பூச்சிகள் பவளத்தைப் போல ஊர்கின்றன. மான்கள் புல்லே அருந்தி இன்புறுகின்றன. வண்டுகள் தாதை உண்ணுகின்றன. பசுக்கள் அறுகம் புல்லே வயிறு மேய்கின்றன.

காதலுலகத்தைக் கோலம் செய்து காட்டும் அகப் பாட்டுக்களில் விலங்கினங்களிடையிலும் காதல் இருப்பதை விளக்கும் காட்சிகளைப் புலவர்கள் காட்டுவது வழக்கம்.

கார் காலத்தில் தழைத்துப் பூத்த மரங்களில் உள்ள மலர்களில் வண்டுகள் தாதை உண்ணுகின்றன. ஆண் வண்டுகள் புெடை வண்டுகளோடு அந்த மலராகிய மாளிகை யில் வகிகின்றன. அந்த வண்டுகளின் காதலுக்கு ஊறுபாடு நேராமல் இருக்கவேண்டுமென்று எண்ணுகிறன் தலைவன். தன் தேரிலுள்ள மணிகளின் நாக்கைக் கட்டிவிடுகிறன். மணியின் ஒலியைக் கேட்டு அந்த வண்டுக் காதலர் அஞ்சிப் .பிரிந்து போகக் கூடாதே என்ற எண்ணம் அவனுக்கு. பன்றியைக் கொன்ற புலி அதை அவ்விடத்திலேயே தின்பதில்லை. அதை இழுத்துச் செல்கின்றது. தன் இருக்கை யில் உள்ள பெண் புலிக்கும் இரையூட்ட எண்ணியே அவ்வாறு இழுத்துச் செல்கிற தென்ற கருத்துப் பாட்டிலே குறிப்பாகப் புலப்படுகிறது. பள்ளத்தில் விழுந்த ஆண் யானையை மீட்க அதன் காதலியாகிய பெண் யானே படாத பாடு படுகிறது. மழை பெய்த முல்ல்ை நிலத்தில் புல் அருந்தும் பொருட்டுக் குதித்தோடும் இரலே தனியே செல்ல வில்லை; தன் மடிப் பிணேயைத் தழுவிச் செல்கிறது.

14