பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ra ಒ

விரித்துக் கொள்ளவேண்டும். இறைவனுடைய காட்டங்களும் இமையாதவை. இமையாத முக்கண் மூவரிற் பெற்றவன்' என்று மாணிக்க வாசகர் பாடுகிருரர். ஆதலின் இந்த துதற் கண்ணும் இமையாத நாட்டமே.

துதலது இமையா நாட்டம். -

e நெற்றியில் இருப்பது இமையாத கண். இ

கொன்றை மலர்த் தாரையும் மாலையையும் கண்ணியையும் காட்டி, மார்பில் உள்ள நுண் ஞாணேயும் காட்டி, நுதலில் உள்ள இமையாத நாட்டத்தையும் காட்டிய புலவர் சிவபெருமா அனுடைய திருக் கைகளில் உள்ள படைகளைக் காட்ட வருகிரு.ர். -

ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

yk -

சிவபெருமான் திருக்கரத்தில் மழு இருக் கிறது. அது எப்போதும் வெப்பத்தோடு இருப் பது. மழுவாகக் கொதிக்கிறது ' என்று உலக வழக்கில் சொல்வதுண்டு. அந்த மழுவைப் பரசு என்று வடமொழியிலே சொல்லுவார்கள். ம ழு வை ஏந்தியிருக்கும் சிவபெருமான் ஒருவகைஅங்குசத்தையும் ஏந்தி யிருக்கிருன். அதைக் கணிச்சி என்று சொல் வார்கள். மழு முதலிய படைகளால் இறைவன் பகைவரை அடுவான் அவனுக்குப் பகையும் இல்லை; நட்பும் இல்லை. ஆயினும் ஆருயிர்

22