பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AASAASAAASJSJSJSMSeeSAMSJ

இன்ப மலே

சமயங்களில் முழுமையாக வெளிப்படும். சக்தி இறைவைேடு ஒன் றி மறைந்திருத்தலும் உண்டு; அவன் திருமேனியின் இடப்பகுதியிலே ஒன்றி விளங்குவதும் உண்டு; தனியே வேருக இருத்தலும் உண்டு. எந்த கிலேயிலும் சக்தியும் சிவனும் சேர்ந்தே இருப்பார்கள். அந்தச் சேர்க்கை புலப்படாமல் இருப்பதும், ஒரளவு புலகைலும், தெளிவாக வெளிப்படுதலுமாக மூன்று வகையில் அமையும். எப்படி இருப் பினும் இறைவனேடு பிரியாமல் நிற்பவள் சக்தி; எக்காலத்தும் சேர்ந்திருப்பவள் அப்பெருமாட்டி.

சேர்ந்தோள் உமையே.

e எக்காலத்திலும் இறைவனேடு சோங்கிருப்பவள் உமாதேவியாவாள்.

உமாதேவி என்பது,இறைவி இமயமலை அரசன் புதல்வி யாகத் திருஅவதாரம் செய்தபோது ஏற்ற பெயர். அப் பெருமாட்டி தவம் செய்து கொண்டிருந்தபோது இறைவன் எழுந்தருளி, ! உன் தவம் போதும் ” என்று குறிப்பித் தானம். அந்தக் குறிப்பை உள்ளடக்கியது உமா என்ற திருநாமம். உமை என்று சொன்னலும் இங்கே சக்தியையே கொள்ளவேண்டும். கு

女 மேலும் பெருந்தேவனர் சிவபெருமான் திருக்கோலத்தை வருணிக்கிரு.ர்.

இறைவனுடைய திருமேனி செவ்வண்ணம் உடையது. சிவனெனும் நாமம் தனக்கே

26