பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

................ഹാ

மணிமிடற் றந்த ண ன்

அதற்குப் பெரியோர்கள், சிவனது அநாதி முறைமையான பழமை என்று பொருள் எழுதி யிருக்கிருரர்கள். அந்த அநாதி முறைமையான பழமையையே பெருந்தேவனர் தொன்முறை மரபு என்று சொல்கிருரர். அந்த மரபை யாரும் அறிந்திலர்.

அமுதத்தை உண்டு நெடுங்காலம் வாழ்பவர் கள் தேவர்கள். அவர்கள் நெடுங்காலம் மூப்பை அடையாமல் வாழ்பவர்கள்; மூவா அமரர். மனிதர் களுக்குத் தெரியாக பலவற்றை அவர்கள் அறி வார்கள். இறைவன் மகாதேவன் ஆயிற்றே; ஒருகால் அவனே இந்தத் தேவர்கள் அறிந்திருக் கலாமே என்று எண்ணி அவர்களேக் கேட் டால், ' எங்களுக்குச் சிவபிரானுடைய தொன் முறை மரபு தெரியாது” என்றே சொல்வார்கள். புலன்களே அடக்கித் தவம் புரிந்து வாழும் முனிவர்கள், தேவர்கள் அறியாத ஞானம் பெற்றவர்கள்.இறைவனே அறிந்து அவனுடைய அருள் பெற்றவர்கள். அவர்களைக் கேட்டால், நாங்கள் அறிந்தது எவ்வளவு இறைவனே யாரால் அறிய முடியும்?” என்றே அவர்களும் சொல்வார்கள். இறைவன் அருளைப் பெருதவர் கள் சிறிதும் தடையின்றிப்போலியாக அவனை அறிந்து விட்டேமென்று-கூறுவார்களேயன்றி உண்மையில் இறைவன் அருளைப் பெற்ற

33