பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப மலை

எங்கே பார்த்தாலும் காடு ; பூமரங்கள் ; பழமரங்கள். வானே முட்டி வளர்ந்த மரங்கள் அடர்த்தியாக கின்றன. மழைக்கு அங்கே பஞ் சம் ஏது? மலைச்சாரலில் அருவி ஒல்லெனப் பாய்ந்து வருகிறது. குறிஞ்சி நிலத்தின் முழு அழகும் அங்கே களி நடம் புரிகின்றது.

எத்தனை வகையான மரங்கள்! மலேயருவி நீரின் ஊட்டத்தால் மதமத வென்று வளர்க் திருக்கும் வாழை மரங்கள் ஒருசார். வாழையின் இலையைப் பார்த்தாலே அதன் வளப்பம் தெரி யும். மிகமிக நீளம்; மிகமிக அகலம். கொழு மைக்கு அடையாள மென்று அந்த இலையைச் சொல்லலாம். மலேச்சாரலில் வளரும் அத்தனே மரஞ் செடி கொடிகளின் வளத்தை எழுதிய ஏடு என்றுகூட அதைச் சொல்லலாம். அத் தகைய கொழுவிய இலையையுடைய வாழை, மரத்தின் குலே எப்படி இருக்கிறது ? எவ்வளவு பெரிய குலை ! ஒரு குலேயில் எத்தனை காய்கள் என்று எண்ணிப் பார்த்தால் அகன் பெருமை நன்ருகத் தெரியும். பெருங்குலை; காய்கள் பெரி யனவாக இருப்பதோடு ,மிகுதியாகவும் இருக் கின்றன. கோழில் வாழையின் பெருங்குலையை

43