பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும் - - - - - - - - , حی...م.م.م.,سر.

பான். பொருளாசைக்குத்தான் எல்லை என்பது இல்லையே! அவனே அறத்தையும் இன்பத்தை யும் மறவாதவன். பொருளேக் கருவியாகக் கொண்டு அறம் செய்யவும் இன்பம் நுகரவும் எண்ணியவன். ஆகவே அவனுக்கு ஒரளவு பொருள் கிடைத்தவுடன் போதும் என்ற மன நிறைவு உண்டாயிற்று. தன் பிரிவால் கன் காதலி துன்புறுவாளாதலின் அந்தப் பிரிவை எத்தனேக்கு எத்தனே குறுக்கிக் கொள்ள லாமோ அத்தனைக்கு அத்தனே நல்லது என் பதை அவன் உணர்ந்தவன். ஆகவே பொருள் போதிய அளவு கிடைத்தவுடன் தன் ஊருக்கு மீள எண்ணினன்.

அவனுடைய உள்ளத்தில் அவன் காதலி எப்போதும் இடம் கொண்டிருந்தாள். அவ ளுடைய அழகை யெல்லாம் ஒய்வு நேரங்களில் எண்ணி எண்ணி இன்புறுவான்.

அவள் தன் கையிலே அழகான வளைகளே அணிந்திருந்தாள். வளைச் செட்டி வந்தால் எதையோ எடுத்தோம், போட்டுக் கொண் டோம் எ ன் று இருக்கமாட்டாள். கன்ருக ஆராய்ந்து பொறுக்கி எடுத்த அணிந்து கொள் வாள். அவள் உடம்பு முழுவதும் இயற்கையா கவே கம்மென்று ஒருவகை நறுமணம் கமழும். அதற்கு உவமையாக எதைச் சொல்வது ?

73