பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கரும் ു م، مد. تمام

எத்தனே வேகமாகப் போகவேண்டும்?" என்று கேட்டான் சாரதி.

' குதிரை போகிற வேகத்தில் போகட்டும். அவற்றைத் துன்புறுத்த வேண்டாம். கடிவாள வாரை இறுக்கிப் பிடிக்கவேண்டாம். தளர விடு. யாழ் நரம்பைப்போல மெல்லப் பிடித்து விடு ' என்ருன்.

குதிரைகள் தாமே வேகமாகப் போகும்; ஆனலும் தேர்வலவன் கன் தலைவன் பேச்சைக் கேட்டு வியந்தான். தன் காதலியைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில், ! உன்னல் எவ்வளவு வேகத்தில் ஒட்ட முடியுமோ, அவ்வளவு வேக மாக ஒட்டு' என்று தலைவன் சொல்வான் என்று எதிர்பார்த்தான். தலைவன் உயிர்களிடத்தில் அன்புடையவன். அந்த இயல்பு என்றும் மாறுவதில்லை. காதலியைக் காணப்போகும் இந்த அவசரத்திலும் அவன் குதிரைகளைத் துன்புறுத்த விரும்பவில்லை.

' குதிரைகளின் கடிவாள வாரைத் தளரப் பிடி ' என்று சொன்னதைக் கேட்டு வியந்த வலவனுக்கு, அடுத்தபடி இன்னும் பெரு வியப்பை அளிக்கத் தக்க ஒரு செய்தியைத் தலைவன் சொன்னன்.

தேரின் மணிகள் நாம் போகும்போது ஒலிக்கக்கூடாது ' என்ருன் தலைவன்.

77