பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும்

1. வை-கூர்மை. நுனே - முனே. இல்லம் - தேற்ரு மரம். இதன் கொட்டையைக் கலங்கல் சீரைத் தெளிய வைக்க உபயோகிக்கிருேம். 2. கால்-காம்பு. பிணி , மொட்டு. அவிழ. மலர, 3. கிரித்தன்ன - கிரித்தது அன்ன என்பதன் விகாரம்: திரித்தாலன்ன என்பதன் விகாரம் என்று கூறுவதும் உண்டு. மா - கரிய. இரு - பெரிய. மருப்பின் - கொம்பை உடைய, 4.பால்-பருக்கைக் கல்; கூழாங்கல். அவல்.பள்ளம். அடைய - முற்றும். இரலை . கலேமான். தெறிப்ப - துள்ளிக் குதிக்க. -

மாயிரு மருப்பின் இரலை பால் அவல் அடையத் தெறிப்ப என்று கூட்டிக் கொள்ளவேண்டும். மருப்பின் இாலே என்று தொடரும் சொற்களுக்கு இடையே வந்த 'பாலவ லடைய’ என்ற தொடரை இடைப் பிறவரல் என்று கூறுவர்.

5. மலர்ந்த - மலர்ச்சி பெற்ற, ஞாலம்-உலகம். புலம்புவருத்தம்; மழையில்லாமையால் உண்டான வெப்பமாகிய வகுத்தம். புறங்கொடுப்ப-புறங்காட்டி ஒட புறக்கொடுப்ப" என்றும் பாடம் உண்டு; புறத்தே போக’ என்று அதற்குப் பொருள் எழுதுவர் பழைய உரையாசிரியர். 6. கருவி.ஆவி, இடி, மின்னல் முதலியவற்றின் தொகுதி. வானம் - மேகம், கதழ் - விரையும். உறை - நீர்த்துளி. 7. கார் . கார்காலம்; எழுவாய், செய்தன்று.செய்தது. கவின்.அழகு. கானம் . காட்டை.

8. குரங்கு-வளைந்த, உளைப் பொலிந்த-தலையாட்டத்தால் விளக்கம் பெற்ற, கொய் . கத்தரிகையால் கத்தரித்த, சுவல்பிடரிமயிர். புரவிகுதிரை. 9.ஆர்த்தன்ன.ஆர்த்தது அன்ன; கட்டினது போன்ற வாங்கு. கையில்ை இழுக்கும். வள். வார்; இங்கே கடிவாள வார். பரிய-தளர. 10.பொங்கர்-மரத் தில். துணே - பெடை வண்டு. வதிந்த தங்கிய தாது உண் பறவை என்ற தல்ை வண்டாயிற்று. 11 பேதுறல். கலங்கு தலுக்கு.

85