பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு வழி ‘. . .

காதலன் வந்து மறைவிலே கிற்கிமூன். அவனே வழக்கம்போல் கண்டு அளவளாவும் பொருட்டுத் தோழியைத் துணையாகக் கொண்டு காதலி போகிருள். ஒருவரும் அறியாமல் காதலன் வருவதும், வீட்டில் உள்ளவர்கள் அறியாமல் கட்டுக் காவலேக் கடந்து சென்று காதலி அவனைச் சந்திப்பதும் எவ்வளவு இடர்ப்பாடான செயல்கள் ஒவ்வொரு நாளும் என்ன துன்பம் நேருமோ என்றும், தம் முடைய களவுக் காதல் வெளிப்பட்டு விடுமோ என்றும் தலைவி அஞ்சிக் கொண்டே இருக் கிருள். இந்த அச்சம் தலைவனைக் கண்டு அள வளாவும் பொழுது அவளுக்கு மறந்து போகிறது. அவனைக் காணுத பொழுதெல்லாம் அச்சமும் கவலையும் அவள் உள்ளத்தில் தோன்றித் துன்புறுத்துகின்றன.

அவர்கள் இரவிலே வீட்டுக்குப் புறத்திலே சக்தித்தார்கள். காடும் மலையும் கடந்து தலைவன் வரவேண்டும். இடையில் எவ்வளவோ இடையூறுகள் நேரலாம். மழை பெய்து வழி தெரியாமற் போகலாம். காட்டாற்றில் வெள்ளம் மிகுதியாக வரலாம். இரைதேடி உலவும் புவி

88