பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AASAASAASAAASMMAMMMAMASMSASJJJAAAS @ iru was

வழியிலே செல்ல முடியுமா ? புற்றிலே கையை விட்ட கரடியின் சகத்தால் குத்தப் பட்ட பாம்பு சீறியெழுந்து ஓடாதா? புற்றுக் குள்ளே கிடக்கும் பாம்புக்கு நாம் அஞ்ச வேண்டாம். கரடியால் துன்புறுத்தப்பட்ட பாம்பு சீறி ஒடும்போது அதற்கு அஞ்ச வேண்டாமா ?

தோழி: நள்ளிரவில் காட்டு வழியே போவது அரிது; போனல் கரடியும் பாம்பும் துன்புறுத் தும் என்று சொல்கிருய். நானும் இரவில் காட்டு வழியே போவது அரிது என் தானே சொல்கிறேன்? -

தலவி! நீ போகக் கூடாது என்று சொல் கிருய். நானே இரவில்ே காட்டிலே போவத ல்ை உண்டாகும் இடையூறுகளைத் தெளி வாக அறிந்திருக்கிறேன்; அப்படி அறிந் திருந்தும், போவது அரிதன்று என்று துணிவு கொள்கிறேன். இதுதான் உன் கருத்துக்கும் என் கருத்துக்கும் உள்ள வேறு பாடு.

தோழி: போகிற வழியில் கரடி மாத்திரங்தான

இருக்கும் ?) -

தலவி, கரடியைவிடக் கொடிய விலங்குகள் இருக்கும் என்பதும் எனக்கு நன்முகத் தெரியும். புலி முதலிய காட்டு விலங்குகள்

96