பக்கம்:இன்ப வாழ்வு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

99


புதியவளிடமே வைத்துக் கொண்டான். அவள் வீட்டிலேயே எப்போதும் தங்கியிருக்கலானான். குழந்தை நினைவு வரும்பொழுது மட்டும் தலைவியிருக்கும் வீட்டிற்கு வருவான். உடனே திரும்பி விடுவான். இச்செயலுக்குத் தலைவியும் தோழியும் வருந்தாமல் இருக்க முடியுமா? மக்கள் வாழ்வின் மாற்றந்தான் என்னே! கொடுமை!

ஒருநாள் தலைவியும் தோழியும் தலைவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவனும் வந்தான். தலைவி எழுந்து வரவேற்றாள். கொஞ்சம் தாகத்திற்கு அருந்தும்படி வேண்டினாள். காமக் கிழத்தியின் வீட்டில் உண்டு களித்த அவனுக்குத் தலைவி தாகத்திற்குக் கொடுத்தால் பிடிக்குமா? வேண்டா வெறுப்பாய், கொஞ்சம் குளிர்ச்சியான தண்ணீர் கொண்டுவா என்று கட்டளை யிட்டான். அவளும் அப்படியே குளிர்ச்சியாகக் கொடுத்தாள். வாங்கிச் சிறிது பருகினான். அவ்வளவுதான். தொடங்கி விட்டான் கதையை. என்ன! இத் தண்ணீர் வெப்பமாகச் சுடுகின்றதே! நான் குளிர்ச்சியாக அல்லவோ கேட்டேன்? அதோடு உவர்க்கின்றதே! (உவர்ப்பு - கரிப்பு) என்று உறுத்தலாகக் கூறிப் புறப்படத் தொடங்கினான். கேட்டாள் தோழி. அவளால் பொறுக்கமுடியவில்லை. அவனை வழி மறித்துக் கொண்டாள். ‘ஐயனே! இது என்ன விந்தை! அன்று அவள் தந்த பச்சைவேப்பங்காய் இனித்தது. இன்றோ, பலரும் விரும்பும் இனிப்புடைய பாரியின் பறம்புமலைச் சுனைநீர் தைமாதத்திலும் சுடுகின்றது - அதோடு உவர்க் கின்றது. இது உண்மைதானா? இதற்குக் காரணம் என்ன? பழைய அன்பை மறற்துவிட்டீர் போலும்? தங்கள் அன்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/100&oldid=550667" இலிருந்து மீள்விக்கப்பட்டது