பக்கம்:இன்ப வாழ்வு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

113


துணியும். எனவே, பத்தேர் உள்ளவர்களும் பரபரக்கும் போது, ஒர் ஏர் உள்ளவனின் விரைவின் மிகுதியை விளம்பவும் வேண்டுமோ? அவன் கால்கள் விரையும். கையும் வாயும் காளைகளை விரட்டும். அவன் விரை வாகச் சுழலும் ஒர் (இயந்திரப்) பொறியைப் போல் தோற்றம் அளிப்பான். சுருங்கக் கூறின், அவன் மனம் மிகமிக விரைந்து முந்தும் என்பதில் தடையில்லை. எனவே, உலகில் ஒரு பொருளின் விரைவுக்கு உவமை கூற விரும்பு வோர், பொதுவாக மனத்தைக் குறிப்பிடின் மிகவும் பொருந்துமே!

இச்செய்யுளில் புலவர் இடமறிந்து ஏற்ற உவமையைக் கையாண்ட திறத்தால் ‘ஓர் ஏர் உழவனார்’ என்னும் பெயர் பெற்றார் என்பது பெறப்படும்.

மொத்தத்தில். ஓர் ஏர் உழவன்’ என்னும் தொடர்,

அன்புக்கும் அளிக்கும் (அனுதாபத்திற்கும்) உழைப்புக்கும் ஊக்கத்திற்கும் உரியதாகும்.

தமிழ்நாட்டில் தமிழையே தாய்மொழியாக் கொண்டசில தமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றார் அம்மானை தமிழரே முன்தமிழைத் தாழ்நததென்றா ராமாயின் தமிழ்க்குருதி அவர்க்கில்லாத் தன்மையோர் அம்மானை குருதிவட கஞ்சுதீண்டக் குலைந்ததுதான் அம்மானை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/114&oldid=550683" இலிருந்து மீள்விக்கப்பட்டது