பக்கம்:இன்ப வாழ்வு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

115


அவ்வமயம் அறிவர் ஒருவர் அவர்களை அடைந்தார். அறிவர் என்பார் துறவு பூண்டவர்; முக்காலமும் அறியும் பேராற்றல் மிக்க பெரியோராவர்; தலைவன் தலைவியர் களை இடித்துரைத்து அறிவு கொளுத்தும் அருளுடையவர் அன்னோரிடத்தில் அறிவர்க்கு நன்மதிப்பும் செல்வாக்கும் உண்டு. அறிவர் கூற்றை மறைமொழியாக நம்பி அனைவரும் அதன்வழி நடப்பது வழக்கம். அவ்வறி வரிடத்தில் தலைவியின் ஆற்றாமையினைத் தோழி அறிவித்துத் தலைவன் குறித்த பருவ வரவை வினா

6)|Q) or 60s ss 6s.

‘அருள்மிக்க அறிவரே! என்றுவருமோ என எதிர் பார்த்துத் தலைவி நடுங்குதற்குக் காரணமான வாடைக் காற்று வீசும் பருவம் எப்போது வரும் என்று எங்கட்கு எடுத்துரைப்பீராக! அப்பருவம் எக்காலத்தில் வருவதாகத் தங்கள் திருவாயால் அறிவிக்கின்றீர்களோ அக்காலத்தில் தலைவியின் காதலரும் வந்து விடுவார். என்பது எங்கள் நம்பிக்கையாகும். மேலும் நும் வாயால் கேட்பின் எங்கட்கும் பெரிய அமைதியும் ஆறுதலும் உண்டாகும். ஆதலின் அருள் கூர்ந்து அறிவிப்பீராக! நுமக்கும் நன்மை வந்துறு வதாகுக! குற்றமற்ற தொரு தெருவில், ஒரே வீட்டில், நாய் இல்லாத அகன்ற பெரிய வாயிற்படியில், உயர்ந்த செந்நெற் சோற்றுக் குவியலில் மிகவும் வெண்மையான நெய் வார்த்து அளிக்கும் பிச்சை உணவை (துறவிகள் உண்ணும் உணவுக்குப் பிச்சை எனப் பெயர்) வயிறு நிறைய உண்பீராக! உண்டு, பனிக்காலத்திற்கு உகந்ததாகிய வெந் நீரை, சேமித்துக் கொள்வதற்காக வைத்திருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/116&oldid=550685" இலிருந்து மீள்விக்கப்பட்டது