பக்கம்:இன்ப வாழ்வு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

117


திணை: பாலை பிரிவைப்பற்றிய செய்தி கூறப்பட்டிருத் தலின் இச்செய்யுள் பாலைத்திணை யாயிற்று.

துறை:

தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாயது. இது வெளிப்படை.

பாடியவர்:

ஒரில் பிச்சையார். இப்புலவர் இச்செய்யுளில் ஒரே இல்லில் (வீட்டில்) பெறக்கூடிய பிச்சையைப் பற்றிச் சிறப்பித்துப் பாடியுள்ளார் ஆதலின் ஒரில்பிச்சையார்’ என்னும் இப்பெயர் பெற்றார். இதிலென்ன சிறப்புளது என்றாராய்வோம்:

பெயர்க்காரணச் சிறப்பு:

உலகில் பிச்சையேற்று உண்ணும் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் ஒவ்வொரு நேரத்தில் ஒருவேளை உணவுக்காக ஊர்பல சுற்றி உழல்வான். ஒவ்வோர் ஊரிலும் பல தெருக்களிலும் திரிவான். ஒவ்வொரு தெருவிலும் பலவீடுகளிலும் குறையிரப்பான். ஒவ்வொரு நேரத்தில், எங்கோ ஒவ்வொரு வீட்டில் ஒருபிடிச் சோறு கிடைப்பதும் அரிதாயினும் ஆகும். அவனுக்கு அரைவயிறும் நிரம்பாமற் போயினும் போகும். இது உலகில் கண்கூடு. சில பிச்சைக் காரர்க்குமண அமைதியும் நிறைவும் உண்டா காமைக்குக் காரணமும் இதுவே. இதுபற்றியே சிலர் வயிறு நிறைந்தாலும் வாளா இருப்பதில்லை. அடுத்த வேளைக் காக முன்கூட்டியே வீடுகள் தோறும் சென்று உணவைச் சேமிக்கத் தொடங்குவார்கள். சேமித்து ஓரளவு முட்டையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/118&oldid=550687" இலிருந்து மீள்விக்கப்பட்டது