பக்கம்:இன்ப வாழ்வு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

119


மொழி யென்றால் அது சாலவும் பொருந்தும். இங்கு அவ்வில்லின் சிறப்பினையும் பிச்சையின் பெருமையினையும் நுணுகி நோக்க வேண்டும்.

இல்லின் சிறப்பு

உலகில் குறுகிய மனப்பான்மைக்காரர்கள் சிலர் பிறர் வந்து நெருங்காமல் இருப்பதற்காகத் தம் வீட்டு வாயிற்படியினை இரும்புக் கம்பி முதலியவற்றால் குறுக்கி வைத்திருப்பார்கள். வாயிற்படி பெரிதாய் இருப்பினும் கதவைத் தாளிட்டு வைத்திருப்பார்கள். இவ்வீடு இப்படிப் பட்டதன்று, பலரும் நெருங்கிப் பழகுவதற்கு ஏற்றவண்ணம் அகன்ற வாயிற்படியை உடையதாகும். இது பற்றியே வியன் கடை (அகன்ற வாயில்) எனப்புலவர் பாடியுள்ளார். மற்றும், சிலர் வீட்டு வாயிற் படியில் எஞ்ஞான்றும் நாய் தங்கியிருக்கும். எவரேனும் அங்கே செல்வாராயின் குரைத்துத் துரத்தும். இவ்வித இழிந்த இயல்புடையதன்று இவ்வீடு. இதுகருதியே நாய் இல் வியன் கடை எனப் பாடினார் புலவர். (நாய் மந்தை மேய்ப்பவர்கள் இதனை உணரவேண்டும்) ஆனால், ஒரு தெருவில் இரண்டொரு வீட்டினர் நல்லவராய் இருக்கலாம்; ஏனையோர் கன்னெஞ் சராய் இருக்கலாம். அத்தெருவில் பிச்சைக்காரர்கள் செல்வார்களே யானால், அவர்கட்குப் போதிய வசதி யேற்படாது. ஒரு வீட்டினர் திட்டுவார்; ஒரு வீட்டினர் துரத்துவார். இன்னொரு வீட்டினர் பிச்சை போடுபவர் களைத் தடுப்பார். மற்றொரு வீட்டினர் பிச்சை போடுபவர் களையும் சேர்த்துத் திட்டுவார். இத்தகைய தெருவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/120&oldid=550690" இலிருந்து மீள்விக்கப்பட்டது