பக்கம்:இன்ப வாழ்வு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

125


அதனால் அவள் வருத்தத்திற்கு அளவேயில்லை. அன்று அவன் அன்பின் உயர் கட்டத்தில் நின்ற அருமையை எண்ணியெண்ணி இரங்கினாள். இன்று ஏறிட்டும் பார்க்காத எளிமையை எண்ணி யெண்ணி ஏங்கினாள். மேலும், குடும்பம் நொடித்து விட்டால், கணவர் என்ன ஆவார்? குழந்தை என்ன ஆவான்? நாம் என்ன ஆவோம்? என்று அஞ்சி அயர்ந்தாள். பிள்ளைபெற்றும் பாவியானேனே என்று பதறினாள். கணவரை எவ்வகையில் நல்வழிக்குத் திரும்பச் செய்யலாம் என்று எண்ணலானாள். கற்புடைப் பெண்டிரின் இயல்பு இதுதான் அல்லவா?

வழக்கம்போல் அவன் ஒரு நாள் ஒப்பனை செய்து கொண்டான். பட்டாடை உடுத்திக் கொண்டான். விலை யுயர்ந்த அணிகலன்களை அணிந்து கொண்டான். நறும் பூச்சுக்களைப் பூசிக்கொண்டான். அழகியதும் நறுமணம் வீசுவதுமான பூமாலை ஒன்றைக் கழுத்தில் போட்டுக் கொண்டான். இவ்வித ஆடம்பரத்தோடு அடுத்த தெருவில் உள்ள அயலாள் வீட்டிற்குப் புறப்பட்டான். இக்காலத்துச் செல்வர் மோட்டார் வைத்திருப்பது போல அக்காலத்துச் செல்வர்கள் தேர் வைத்துக் கொண்டிருந்தனர். அக் காலத்து வழக்கப் படியே அவனும் தன் தேரின் மேல் அமர்ந்தான். பாகனும் குதிரையை முடுக்கத் தொடங் கினான்.

அவள் அக்காட்சியைக் கண்டாள். வாளா விடுவாளா? தன் குழந்தை மகனைக் கூப்பிட்டாள்; தகப்பன் புறப் படுவதைச் சுட்டிக் காட்டினாள். ‘என் கண்ணே! இதோஉன் அப்பா எங்கேயோ போகின்றார்; நீ விடாதே; அழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/126&oldid=550696" இலிருந்து மீள்விக்கப்பட்டது