பக்கம்:இன்ப வாழ்வு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இன்ப வாழ்வு


காதல் சுவையில் விறுவிறுப்புடையவர்கள் இந்தக் குறளை ஊன்றிக் கவனிக்கவேண்டும். இப்போது ஒரு சில நாடகக் கதைகளாலும் நாட்டியங்களாலும் பரப்பப்படுகின்ற நாய்க் காதலன்று இக்குறளில் சொல்லப்படுங் காதல். பகைவர்களை முறியடித்துத் தாய் நாட்டுக்குத் தொண் டாற்றும் தறுகண் மறவனது தமிழ்க் காதலாகும் இது. வீரமற்ற கோழை நெஞ்சங்களுக்கு - சேலை கட்டிய உருவங்களின் பின்னே திரிந்து வெம்பிப்போகும் இளம் பிஞ்சுகளுக்கு நினைவிருக்கட்டும் இது! இன்னோர்க்குக் காதலைப்பற்றி நினைக்க உரிமை ஏது?

இந்தக் குறளில் ‘நண்ணாரும் என்ற சொல்லுக்கு, போர்க்களத்தில் வந்து நண்ணாத-சேராத பகைவர் எனப் பரிமேலழகர் உரை பகர்ந்துள்ளார். இவ்வாறு பொருள்கூறல் தமிழிலக்கிய மரபாகாது. இவர் இவ்வாறு பொருள் உரைத்ததற்குக் காரணம், நண்ணாரும் (நண்ணார் + உம்) என்பதில் உள்ள ‘உம்மை இறந்தது தழுவிய எச்ச உம்மை எனக் கொண்டதுதான். அண்ணனும் வந்து விட்டார்’ என்றால், இதற்கு முன்பு இன்னும் யாரோ வந்திருக்கிறார் என இறந்துபோன - அதாவது நடந்து போன, எச்சமாய் உள்ள - அதாவது மறைந்திருக்கிற மற்றொரு கருத்தையும் தழுவுகிற ‘உம் தான் இறந்தது தழுவிய எச்ச உம்மை (உம்) எனப்படுவது. எனவே, நண்ணாரும் அஞ்சுவர் என்றால், இன்னும் யாரோ அஞ்சி யுள்ளார் என மனத்திற் கொண்டு, போர்க்களத்தில் வந்த பகைவர் அஞ்சுவதல்லாமல், வராத பகைவரும் அஞ்சுவர் என்று பரிமேலழகர் கூறியுள்ளார். தமிழில் நண்ணார்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/141&oldid=550713" இலிருந்து மீள்விக்கப்பட்டது