பக்கம்:இன்ப வாழ்வு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

141


என்ற சொல்லுக்கு இஃதன்று பொருள். அதாவது, நண்ணுபவர் - நண்ணாதவர் என்றால் போர்க்களத்தில் வருபவர் - வராதவர் எனல் தமிழ் மரபு அன்று. நண்ணு பவர் - நண்ணாதவர் என்றால், வந்து நட்பு கொள்பவர் - கொள்ளாதவர் எனலே சரி.

எப்போதுமே பகைவன் அஞ்சமாட்டான். அவ்வாறு அஞ்சுபவன் பகைவனாகமாட்டான். தன்னால் முடியா விட்டாலும் பகைவன் பணியமாட்டான். அஞ்சுபவனே பணிவான் - பணிபவனே அஞ்சுபவன் - அடிமையே அஞ்சுவான். ஆனால், நண்ணாரும் உட்கும் பீடு’ என்பது குறட்பகுதி. இங்கே நண்ணாரும் என்பதிலுள்ள ‘உம்’ உயர்வுசிறப்பு உம்மை'யாகும். அதாவது, அஞ்சாத உயர்ந்த சிறப்புடைய பகைவரையும் அஞ்சி வெட்கித் தலைகுனியச் செய்கின்ற அவ்வளவு பெரியபீடு எனப் பொருள் கொள்க. நண்ணாரும் உட்கும்பீடு என்பது, ‘குறவரும் மருளும் குன்று’ என்பது போன்ற தொடர் என்பதைப் பரிமேலழகர் உணராவிடினும், இலக்கணங்கற்ற ஏனையோராயினும் உணர்க. மேலும் இங்கே உட்குதல் என்றால் வெறும் பணிவச்சம் அன்று; தன் முடியாமைக்கு நாணித் தலை குனியும்படியான தோல்வியச்சமே உட்குதல் ஆகும்.

அடுத்து, பீடு’ என்னும் சொல்லுக்குப் பொருள் காண “வள்ளுவர் அகராதி'யையே புரட்டுவோம். வள்ளுவர் மற்றோரிடத்தில் ஏறுபோல் பீடு நடை’ என்றுளார். ஏறு - ஆண் சிங்கம். ஆண் சிங்கம் போன்ற பெருமித நடை என்பது அதன் பொருள். எனவே அனைவரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/142&oldid=550714" இலிருந்து மீள்விக்கப்பட்டது